பீகாரில் இளைஞர் ஒருவரின் வயிற்றில் இருந்து சாவி வளையம், கத்தி போன்ற உலோகங்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரின் கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் வசித்து வரும் 22 வயது இளைஞருக்கு சில நாட்களுக்கு முன் திடீரென வயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டு உள்ளது.
அதனை தொடர்ந்து, மோதிஹாரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அந்த இளைஞரை சிகிச்சைக்காக அவருடைய குடும்பத்தினர் கொண்டு சென்று அனுமதித்துள்ளனர்.
அப்போது அவரை பரிசோத்தித்த மருத்துவர்கள் அவரது வயிற்றில் சில உலோகங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதன் பின்னர், அவரது வயிற்றுக்குள் இருந்த உலோகங்களை அறுவைசிகிச்சை மூலமாக அகற்றியுள்ளனர்.
இதுபற்றி டாக்டர் அமித் குமார் கூறியதாவது,
“அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இளைஞருக்கு உளவியல் சிகிச்சை அளிக்கப்பட்டது. எக்ஸ்-ரே பரிசோதனை செய்ததில், அவருடைய வயிற்றில் உலோக பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.
அவருக்கு அறுவை சிகிச்சை செய்வது என முடிவான நிலையில், டாக்டர் அமித் குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சையை மேற்கொண்டனர். இதில் முதலில், சாவி வளையம் ஒன்று நீக்கப்பட்டது.
இதையும் படிங்க : கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் : கண்டிப்பாக தரிசிக்க வேண்டிய தமிழக கோயில்கள்!
அதன்பின்னர், 2 சாவிகள், 4 அங்குலம் நீளமுள்ள கத்தி ஒன்று மற்றும் 2 நகவெட்டிகளும் அவருடைய வயிற்றில் இருந்து நீக்கப்பட்டன.
இந்த தகவல் அறிந்த அவருடைய குடும்பத்தினர் மற்றும் சுற்றியிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி அந்த இளைஞரிடம் கேட்டபோது, சமீப காலங்களாக உலோக பொருட்களை விழுங்க தொடங்கியிருக்கிறார் என தெரிய வந்தது.
தற்போது அவருடைய நிலைமை சீராக உள்ளது. உடல்நலம் தேறி வருகிறது” என கூறியுள்ளார்.
மேலும், அந்த இளைஞருக்கு சில மனநல பாதிப்புகளும் இருக்கின்றன. அதற்காக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் அந்த நபருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கூறியுள்ளார்.