வானத்திலிருந்து மிகப்பெரிய சத்தத்தோடு பிரம்மாண்ட ஒளி ஒன்று சிலையின் மீது வந்த மோதினால் அது இந்த காட்சி எப்படி இருக்கும். அந்த மாதிரியான புகைப்படம் தான் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.
இந்த உலகத்தில் நடக்க ஒரு சில விஷயங்களும் நம்மைக் கவனிக்க வைக்கும்,அது மட்டும்மின்றி இவை எப்படி நடக்கிறனர் என்று கேள்வி எழுப்பும். அதே போல் தான் சமுகவலைதளங்களில் போட்டோ ஒன்று பரவி வருகிறது. இது எங்கு நடந்துள்ளது என்பதை இந்த பதிவில் காணலாம்.
பிரேசிலில் நாட்டில் உலகத்திலேயே மிக உயர்ந்த இயேசு சிலை யூ டி ஜானிலோ என்ற இடத்தில் 125 அடி உயரத்தில் அமைக்கபட்டுள்ளது.இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சிலையின் மீது மின்னல் தாக்கியுள்ளது.
தற்பொழுது சிலையை மின்னல் தாக்கக்கூடிய புகைப்படம் தான் தற்பொழுது சமூக
வலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.மேலும் இந்த காட்சியில் காந்த ஈர்ப்பு விசை இருப்பது போன்று சிலையின் தலைப்பகுதியில் மின்னல் தாக்கியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் பலமுறை இந்த சிலை யின் மீது நடித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றன.
கடந்த 2018 ஆம் ஆண்டு மின்னல் தாக்கியதில் சிலையின் கை பகுதியில் சிதலமைடைந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் தான் பிப்ரவரி 10ஆம் தேதி அன்று மீண்டும் மின்னல் தாக்கியுள்ளது.
இந்த காட்சியை நபர் ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். தற்பொழுது இந்த புகைப்படம் அதிக அளவில் வைரல் ஆகி வரும் நிலையில் பெரும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
வானத்திலிருந்து மிகப்பெரிய ஒளி ஒன்று இயேசுவின் தலையில் விழுவதால் இதில் ஏதோ மர்மம் இருக்கிறது என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் சிலர் இவை இயற்க்கையான ஒன்று என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
2007 ஆம் ஆண்டில் உலகின் ஏழு புதிய அதிசயங்களில் ஒன்றாக பெயரிடப்பட்ட இந்த சிலை 700 டன் வலுவூட்டப்பட்ட கான்கிரீட்டால் ஆனது.இந்த சிலையை ஒவ்வொரு ஆண்டும் சுமார் இரண்டு மில்லியன் மக்கள் பார்வையிடுகின்றனர்.