மும்பையில் இன்று நடைபெற உள்ள ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில், கூட்டணியின் இலச்சினை வெளியிடப்படவுள்ளது தகவல் வெளியாகியுள்ளது .
மத்தியில் ஆளும் பாஜக உடனான கட்சிகளுக்கு எதிராக தொடஙக்கப்பட்டுள்ள INDIA கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மும்பையில் நேற்று மாலை தொடங்கியது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க,ஸ்டாலின் உள்பட ஏராளாமான எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்த இந்த INDIA கூட்டணியின் லோகோ இன்று காலை 10.30 மணிக்கு வெளியிடப்படுகிறது . மேலும் இன்று மதியம் 3.30 மணிக்கு INDIA கூட்டணியின் சார்பில் செய்தியாளர் சந்திப்பும் நடைபெற உள்ளது.
இதுமட்டுமில்லாமல் இந்த மாபெரும் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் யார் என்பது குறித்தும் இன்று நடைபெறும் கூட்டத்தில் இறுதி செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
நேற்று இரவு உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த விருந்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட கூட்டணி கட்சித் தலைவர்கள் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து தீவிர ஆலோசனை நடத்தியாக கூறப்படுகிறது .