Taste Of Malaysia என்ற பெயரில் மலேஷியா உணவுத்திருவிழா சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள வெஸ்டின் ஹோட்டலில் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மலேஷிய கன்சல்ட் ஜெனரல் சரவணக்குமார் கலந்துகொண்டார்.
இதைபோல், மலேஷிய அரசின் சுற்றுலா பிரிவான டூரிஸ்ம் மலேஷியா (Tourism Malaysia) அமைப்பின் இயக்குனர் ரஷீதி-அப் ரஹீம், இணை இயக்குனர் ஷாரிம் பின் கான் ஆகியோர் கலந்து கொண்டனர். Malaysian Airlines அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
மலேஷியா உணவுக்கலைஞர் ராஜேஷ் கண்ணா தலைமையிலான குழு Madras Kitchen Company மூலம் ஜூன் 1 முதல் ஜூன் 11 வரை உணவுகளை சமைத்து பறிமாற உள்ளனர். இந்த உணவுத்திருவிழாவில் கலந்துகொண்டு மலேஷிய உணவுகளை ருசித்து மகிழுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.