தென்கிழக்கு ருமேனியாவில் மூதாட்டி ஒருவர் பல கோடி மதிப்புள்ள அம்பர் கல்லை வாசப்படியில் போட்டு தினமும் வீட்டிற்குள் சென்று வர பயன்படுத்தி வந்துள்ளார். அந்த கல் பற்றிய விவவரம் தெரியாமல் அந்த மூதாட்டி வாசற்படியாக பயன்படுத்தி வந்துள்ளார்.
தென்கிழக்கு ருமேனியாவில் கோல்டி என்ற கிராமத்தில் வசித்து வந்த மூதாட்டி ஒருவரின் வீடு தரை தளத்தில் இருந்து சற்று உயரமாக இருந்துள்ளது.
அப்போது ஒருநாள் அந்த மூதாட்டி தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் ஓடைக்கு சென்றுள்ளார். அங்கு பார்ப்பதற்கு வித்யாசமாக இருந்த ஒரு கல் அவர் கண்ணில் பட்ட நிலையில், அதனைத் தூக்கி வந்து தனது வீட்டின் வாசப்படியில் போட்டு தினமும் வீட்டிற்குள் சென்று வர அதனை பயன்படுத்தி வந்துள்ளார்.
இதையும் படிங்க : September 10 Gold Rate : தங்கம் விலை.. இன்றைய நிலவரம்!
அதன் பின் அந்த மூதாட்டி 90களின் முற்பகுதியில் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு அந்த மூதாட்டியின் வீட்டிற்கு அவரின் உறவினர் ஒருவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார்.
அப்போது வாசற்படியில் இருந்தா அந்த கல்லை பார்த்த அவர் இது சாதாரண கல் போல் இல்லையே என எண்ணி அதில் இருந்து சிறு துண்டை வெட்டி எடுத்து ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளார்.
இதுகுறித்த ஆய்வில் அந்த கல் 38.5 முதல் 70 மில்லியன் வருடங்களுக்கு முந்தைய அம்பர் கல் என்பது தெரியவந்துள்ளது.
பிறகு இந்த தகவலை ரோமானிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி போது அவர்கள் அந்த கல்லை எடுத்து சென்றுள்ளனர்.
அந்தக் கல்லின் எடை 3.5 கிலோ என்றும் இதன் மதிப்பு 1.1 மில்லியன் அதாவது இந்திய மதிப்பில் 9.2 கோடி ரூபாய் என்றும் தெரியவந்துள்ளது. தற்போது அந்தக் கல் கர்கோவில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.