இதுவரை, பிரேமலதாவின் வீடு, அதிமுக அலுவலகம் என 2 கட்ட கூட்டணி பேச்சு வார்த்தையை அதிமுக தேர்தல் கூட்டணி பேச்சு வார்த்தைக் குழுவுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறது தேமுதிக Dmdk.
அதே போல, தேமுதிகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நிறைவுக் கட்டத்தை நெருங்கி உள்ளதாகவும்,
“விரைவில் தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகும்” எனவும் முகம் நிறைய மகிழ்ச்சியோடு தெரித்தனர் அதிமுகவினர்.
இதையும் படிங்க : திமுக ஆட்சியில் கட்டுக்கடங்காத போதைப் பொருள் புழக்கம் – எடப்பாடி கண்டனம்!
அப்போது, தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூட தகவல் வெளியானது. ஆனால், அதிமுக – தேமுதிக ஒப்பந்தம் எதுவும் வெளியாகாத நிலையில்,
கடந்த வெள்ளிக் கிழமை 8 ஆம் தேதி மாலை திடீரென செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா,
“இதுவரை யாருடனும் கூட்டணி முடிவாக வில்லை” எனவும், “பாஜகவுடன் நேரடிப் பேச்சு வார்த்தையில் ஈடுபடவில்லை” எனவும் தெரிவித்தார்.
மேலும், நாங்கள் எதிர்பார்ப்பது போல 1 ராஜ்யசபா சீட்டை வழங்கும் கட்சியுடன் தான் கூட்டணி என்பதில் உறுதியாக இருப்பதாக அப்போது அவர் தெரிவித்தது பேசு பொருளானது.
இந்நிலையில் தான், பாஜகவுடன் இன்று தேமுதிக Dmdk பேச்சு வார்த்தை நடத்த இருப்பதாக பரபரப்பான தகவல்கள் கிளம்பி இருக்கின்றன.
கடந்த சனிக்கிழமையன்று பாஜகவின் மேலிட தலைவர்களான விகே சிங், கிஷன் ரெட்டி ஆகியோர் டெல்லியில் இருந்து சென்னை வந்தனர் அவர்கள், இங்கு வந்ததன் முக்கிய நோக்கமே,
தமிழகத்தில் தடுமாற்றத்தோடு சென்று கொண்டிருக்கும் கூட்டணிக் கட்சிகளுடனான பேச்சு வார்த்தையை நிறைவு செய்வதற்காகத் தான் என தகவல்கள் கசிந்தன.
அது போல அவர்கள் வந்த சில மணி நேரத்தில் அந்த பாஜக மேலிட தலைவர்கள் தங்கி இருந்த ஹோட்டலிலேயே ஓ.பி.எஸ். அணியினருடன் முதல் கட்ட பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.
இதையும் படிங்க : தேர்தல் பத்திர வழக்கு: SBI கால அவகாச கோரிக்கை நிராகரிப்பு
இன்று டிடிவி தினகரனுடனும் பேச்சு வார்த்தை துவங்கும் எனக் கூறப்பட்ட நிலையில்,
தேமுதிகவோடும் பாஜக கூட்டணி பேச்சு வார்த்தையை நட்த்தும் என வெளியாகி இருக்கும் தகவல்கள் அதிமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
பாஜகவில் 5 பாராளுமன்ற தொகுதிகளும், 1 ராஜ்யசபா தொகுதியும் ஒதுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்ததை தொடர்ந்தே, இன்று அந்த இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி பேச்சு வார்த்தை துவங்க இருப்பதாகவும்,
இன்றோ நாளையோ கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானாலும் ஆச்சரியமில்லை என்றும் கூறுகிறது பாஜக தரப்பு.