பிரம்மாண்ட ரிலீஸுக்கு தயாராகும்”மாவீரன்” படத்தின் தமிழக விநியோக உரிமையை வாங்கியது ரெட் ஜெயண்ட் மூவிஸ்..!

தமிழ் சினிமாவில் இருக்கும் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் படத்தின் புதிய அப்டேட்ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது .

யோகி பாபுவை வைத்து மண்டேலா என்ற சூப்பர் டூப்பர் படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில், சிவகார்த்திகேயனின் மாறுபட்ட நடிப்பில் உருவாக்கியுள்ள மாவீரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது .

சாந்தி டாக்கிஸ் நிறுவனம் பல கோடி ருபாய் செலவில் பிரமாண்டமாக தயாரித்துள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை அதிதி ஷங்கர் நடிக்க சுனில், யோகி பாபு, சரிதா, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே, முடிந்துவிட்ட நிலையில் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தற்போது முழுவீச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் மாவீரன் படத்தின் புதிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது . அந்த அப்டேட் என்னவென்றால் நடிகரும் , அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தான் “மாவீரன்” படத்தை, தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்யவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது .

தமிழ் சினிமாவின் நம்பர் 1 விநியோக நிறுவனமாக வலம் வரும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மாவீரன் படத்தின் தமிழக விநியோக உரிமையை பல கோடி ருபாய் கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், பிரம்மாண்ட ரிலீஸுக்கு தயாராகி வரும் மாவீரன் திரைப்படம் ஜூலை 14ஆம் தேதி திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Total
0
Shares
Related Posts