சென்னை மணலி பாடசாலை பகுதியை அமைந்துள்ள சென்னை துவக்க பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சென்னை மணலி பாடசாலை பகுதியில் சென்னை அரசு துவக்கப்பள்ளி அமைந்துள்ளது இப்பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும் மாணவிகளும் படித்து வருகின்றன
இப்பள்ளி ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது இன்று காலை பள்ளியில் அமைந்துள்ள பயன்படுத்தாத கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து உள்ளது இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித காயமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
இப்பள்ளியின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்ற போதும் போதிய வசதிகளை இல்லை என்றும் பலமுறை பள்ளி கல்வித்துறைக்கும் தமிழக அரசுக்கும் கடிதங்கள் எழுதியும் கோரிக்கைகள் வைத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்பது என்றும் குற்றம் சாட்டப்படுகிறது போதிய கட்டிட வசதி இல்லாததால் இரண்டு வகுப்பறைகளை ஒரே வகுப்பில் வைத்து பாடம் நடத்துவதாகவும்,
இதனால் மாணவர்களின் கல்வித் திறன் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது தமிழக அரசு எப்பொழுது மணலியில் அமைந்துள்ள சென்னை துவக்க பள்ளியின் மீது கவனத்தை வைத்து இடியும் நிலையில் உள்ள பள்ளியை சரி செய்யும் என்று பெற்றோர் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இதனிடையே பள்ளியின் மேற்குறை இடிந்த தகவல் அறிந்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை பள்ளியில் அனுமதிக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தலைமையாசிரியர் மீது செய்தியாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்