உத்தரப்பிரதேசதில் பள்ளி கட்டணம் செலுத்தாத மாணவர்களை மோசமாக தண்டித்து அதனை வீடியோ எடுத்து பெற்றோர்களுக்கு அனுப்பிய பள்ளி நிர்வாகத்தின் செயலுக்கு தற்போது கண்டனங்கள் வலுத்து வருகிறது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் கல்விக் கட்டணம் செலுத்தாத சுமார் 100 மாணவர்களை பள்ளிக்குள் அனுமதிக்காமல், சாலையில் அமரவைத்து அதனை வீடியோ எடுத்து அவர்களது பெற்றோருக்கு பள்ளி நிர்வாகமே அனுப்பி வைத்துள்ளது.
Also Read : சான்பிரான்சிஸ்கோ ஆர்ட் மியூசியமில் சோமஸ்கந்தரின் பழங்கால உலோக சிலை..!!
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இக்கொடூர செயலை செய்ததற்காக பள்ளி முதல்வர் மன்னிப்பு கோரினார். இதையடுத்து பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பள்ளி நிர்வாகம் மீது மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது