சென்னையில், இளைஞர் ஒருவர் கர்ப்பிணி பெண் குளிப்பதை வீடியோ எடுத்த நிலையில், போலீசார் அவரை கைதுசெய்து அவரது செல்போனை ஆய்வு செய்த போது அந்த இளைஞர் பெற்ற தாயையும் விட்டு வைக்காமல், அவரது சொந்த தாய் குளிக்கும் வீடியோவையும் பதிவு (recorded) வைத்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
சென்னையில், மேற்கு மாம்பலம் பகுதியைச் சேர்ந்த 24 வயது கர்ப்பிணி பெண் ஒருவர் குளியளரையில் குளித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது ஜன்னலில் இருந்து மர்ம நபர் ஒருவர் வீடியோ எடுப்பதைப் பார்த்த அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
உடனே, அந்தப் பெண் அலறியடித்தபடி சென்று அவரது கவரிடம் இதுபற்றி கூறியுள்ளார். அதனையடுத்து அந்த இளம் பெண்ணின் கணவர் அந்த மர்ம நபரை மடக்கி பிடித்து குமரன் நகர் போலீசாரிடம் ஒப்படைத்தார்.
அதனைத் தொடர்ந்து, போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் பெயர் ஸ்ரீராம் என்பதும், அவர் கிண்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் எக்ஸிக்யூட்டிவாக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பெயரில் போலீசார் அவரது செல்போனை வாங்கி ஆய்வு செய்தனர். அதில், மேலும் பல பெண்கள் குளிக்கும் வீடியோக்கள் பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து, கொடூரத்தின் உச்சமாக அவரது சொந்த தாய் குளிக்கும் வீடியோவும் அதில் பதிவாகியிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அந்த வீடியோ பதிவுகளை (recorded) பின்னணி குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெற்ற தாயை கூட விட்டு வைக்காமல் ஆபாசமாக வீடியோ பதிவு செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.