பாஜக தலைவர்களை ஹிட்லரின் பரம்பரை என சித்தராமையா சாடியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்து வரும் நிலையில் அம் மாநிலத்தின் பாஜக தலைவர்களை ஹிட்லரின் பரம்பரை என முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான சித்தராமையா சாடி உள்ளார்.
எளியவர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அவர் பாஜக பொய்களுக்கான தொழிற்கூடம் என்றும், அவர்கள் பொய்களை உற்பத்தி செய்து, அதனை சந்தைப்படுத்துதலில் வல்லவர்கள் என்றும் தெரிவித்தார்.
மேலும் கொள்ளை புறமாக ஆட்சி அமைத்தவர்கள் பாரதிய ஜனதா என்று கூறிய அவர் மக்களின் ஆதரவு துளியும் இல்லை என்றும் கர்நாடகத்தில் பாஜக பெயரில் ஆட்சி நிர்வாகத்தை ஆர்.எஸ்.எஸ் நடத்தி வருகிறது என தெரிவித்தார்.