தஞ்சையில் உள்ள பள்ளியில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியை இளைஞர் ஒருவரால் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சை மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் ரமணி என்பவரும் மதன் என்பவரும் நீண்ட நாட்கள் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது .
இந்நிலையில் திருமணத்திற்குப் பெண் கேட்டு வீட்டிற்குச் மதன் மற்றும் அவரது குடும்பத்தினர் சென்ற நிலையில், மதனை திருமணம் செய்ய விருப்பமில்லை என்று ரமணி கூறியதாக கூறப்படுகிறது.
ரமணி எடுத்த இந்த திடீர் முடிவால் கடும் ஆத்திரத்தில் இருந்த மதன் ரமணி பணியாற்றும் பள்ளிக்கு சென்றுள்ளார் அங்கு வழக்கம் போல் இன்று காலை மாணவர்களுக்கு ரமணி பாடம் எடுத்துக்கொண்டிருந்த நேரத்தில் வகுப்பறைக்குள் நுழைந்த மதன் தான் மறைத்த வைத்திருந்த கத்தியில் ரமணியை சரமாரியாக குத்தியுள்ளார்.
இதையடுத்து ரத்த வெள்ளத்தில் சரிந்த ரமணியை சக ஆசிரியர்கள் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது அவர் வழியிலேயே உயிரிழந்துள்ளார் .
இந்த பக்கம் மதனை பிடித்த ஆசிரியர்கள் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர் . பட்டப்பகலில் பள்ளி வகுப்பறைக்குள் நுழைந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட மதனிடம் போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.