சீயான் விக்ரமின் வீர தீர சூரன் திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியான நிலையில் தற்போது ரசிகர்களின் அமோக ஆதரவால் இது ட்ரெண்டிங்கில் உள்ளது.
தமிழ் சினிமாவில் இருக்கும் பல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சீயான் விக்ரம் . புதிவிதமான கெட்டப்புகளுக்கு பெயர்போன இவரது நடிப்பில் பல திரைப்படங்கள் உருவாகி வரும் நிலையில் தற்போது இவரது வீர தீர சூரன் திரைப்படத்தின் மீது ஏகபோக எதிர்பார்ப்பு நிரம்பி நிற்கிறது.
அருண் குமார் இயக்கத்தில் தரமாக தயாராகி வரும் இப்படத்தில் விக்ரமுடன் , துஷாரா விஜயன் , எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
மதுரை சுற்றுவட்டார பகுதியில் உருவாக்கி வந்த இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரைலருக்காக அனைவரும் காத்திருந்த நிலையில் நேற்று இப்படத்தின் டீசர் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று வரும் ‘வீர தீர சூரன்’ படத்தின் டீசர் யூடியூபில் 1 கோடி பார்வைகளைக் கடந்து ட்ரெண்டிங்கில் உள்ளது.