தமிழக மக்களோடு அதிமுக பலமான கூட்டணி வைத்துள்ளது . திமுகவுக்கு பாடம் (eps speech) புகட்டும் காலம் வந்துவிட்டது என அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் நேற்று சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று இஃப்தார் நோன்பை திறந்துவைத்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ் கூறியதாவது :
பலமான கூட்டணி என்று சிலர் கூறுகின்றனர். தமிழக மக்களோடு நாங்களும் பலமான கூட்டணி அமைத்திருக்கிறோம். எந்த கூட்டணி பலமானது என்று தேர்தலில் தெரியத்தான் போகிறது.
திமுகவுக்கு பாடம் புகட்டும் காலம் வந்துவிட்டது அவர்கள் ஆட்சி முடியத்தான் போகிறது. தேமுதிகவுடன் தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
Also Read : https://itamiltv.com/tata-motors-agreement-with-tamil-nadu-govt/
இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விரக்தியின் விளம்பில் பேசுகிறார்.
ஜெயலலிதா காலத்தில் அதிமுகவில் இருந்து விலகி சென்றவர்கள் முகவரி (eps speech) தெரியாமல் போனார்கள். அதுபோல இவர்களும் போவார்கள் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.