பேருந்தின் சக்கரத்தில் (wheel) சிக்கி இளம்பெண் ஒருவர் தந்தை கண் முன்னே உடல் நசுங்கி பலியான சம்பவம் பெரும் சோகரை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், மூலக்கரைப்பட்டி பகுதியை சேர்ந்த 22 வயதாகும் மகராசி என்ற இளம்பெண் ஒருவர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் தனது தங்கையை பார்க்க தனது தந்தை ஜெயபாலுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது, ஆரல்வாய்மொழி பகுதியில் வந்தபோது, அப்பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் சாலையோரமாக இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தந்தை, மகள் இருவரும் தேநீர் குடித்துள்ளனர்.
இந்நிலையில், நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் அரசு பேருந்து ஒன்று டிரைவரின் கட்டைப்பாட்டை இழந்து வேகமாக வந்த நிலையில், சாலையோரம் நின்று கொண்டிருந்த மகராசி, ஜெயபால் மற்றும் அவர்களின் இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது.
இச்சம்பவத்தில், இருசக்கர வாகனம் பேருந்தினுள் சிக்கி பல அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், பேருந்தின் சக்கரத்தில் (wheel) சிக்கிய இளம்பெண் மகராசி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாமாக உயிரிழந்தார்.
மேலும், இந்த விபத்தில் தந்தை ஜெயபால் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார். இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து, உயிரிழந்த இளம்பெண் மகராசியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கன்னியாகுமரி மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், கல்லூரியில் படிக்கும் தங்கையை பார்க்க வந்த இடத்தில், தந்தையின் கண்முன்னே உடல் நசுங்கி மகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.