கோவில் திருவிழாவில் தீ மிதிக் குழிக்குள் இறங்கிய பெண் ஒருவர் குழந்தையுடன் தடுமாறி தீக்குழிக்குள் விழும் பதிப்பதைக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மன்னார்குடியில் கோவில் திருவிழாவில் தீ மிதி குழியில் இறங்கிய பெண் ஒருவர் தடுமாறி தீக்குளிக்குள் விழுந்தார். மன்னார்குடி சத்தியம் மூர்த்தி மேட்டு தெருவில் அமைந்துள்ள ஏழை மாரியம்மன் கோவிலில் கடந்த 18ஆம் தேதி முதல் திருவிழா நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இன்று மதியம் மன்னார்குடி திருப்பாற்கடல் குளக்கரையில் இருந்து பக்தர்கள் பலரும் பால்குடம் காவடி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். மாலையில் பால்குட ஊர்வலம் கோவிலை வந்தடைந்த நிலையில், அதன் பிறகு கோவில் வாசலில் அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில் பக்தர்கள் இறங்கி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.
அப்போது சத்தியமூர்த்தி மேட்டு தெருவைச் சேர்ந்த உமா என்ற பெண் ஒருவர் தனது 5 வயது பேத்தியை இடுப்பில் வைத்துக் கொண்டு தலையில் பால் குடத்துடன் தீக்குழிக்குள் இறங்கினார்.
அப்போது நிலை தடுமாறிய அவர் பெண் குழந்தையுடன் தீமிதி குழியில் தவறி விழுந்தார். இதை அடுத்து உடனடியாக அருகில் இருந்தவர்கள் குழந்தை மற்றும் அந்த பெண்ணை மீட்டனர்.
நல்வாய்ப்பாக, இந்த விபத்தில் குழந்தை மற்றும் பெண் இருவரும் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். பின்னர், மேலும் அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவில் திருவிழாவில் பெண் ஒருவர் குழந்தையுடன் தீக்குழிக்குள் விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.