பசுபிக் கடலின் தென்கிழக்கே 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த உலகின் மிகப்பெரிய பவளப்பாறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய பவளப்பாறையை ஆராய்ச்சியாளர்கள் பசுபிக் கடலின் தென்கிழக்கே சாலமன் தீவுக்கூட்டம் அருகே கண்டுபிடித்துள்ளனர்.
சாலமன் தீவுக்கூட்டத்தில் திரி சிஸ்ட்சர் தீவுக்கூட்டம் அருகே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 34 மீட்டர் அகலம், 32 மீட்டர் நீளம், 5.5 மீட்டர் உயரம் கொண்ட இந்த பவளப்பாறை உலகிலேயே மிகப்பெரிய பவளப்பாறை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : November 15 Gold Rate : மீண்டும் மீண்டும் சர்ர்ர்ர்ர்ரென… குறையும் தங்கம் விலை!
மேலும், இந்த பவளப்பாறை 300 முதல் 500 ஆண்டுகள் பழமையானது என்றும், வானில் இருந்து பார்க்கும் போது கூட இந்த பவளப்பாறை தெரியும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த பவளப்பாறைகள் ஆரோக்கியமான நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர்கள் உலக வெப்பமயமாதல் இந்த பவளப்பாறைக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடல்வாழ் உயிரினங்களின் வாழ்வில் பவளப்பாறைகள் பெரும் பங்காற்றுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.