உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் திருடச் சென்ற வீட்டில் ஏசி காற்றில் இதமாக உறங்கிய திருடனை ( horrifying incident in UP ) போலீசார் வந்து எழுப்பி கைது செய்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள ஒருவரது வீட்டில் இரவு நேரத்தில் இளம் வயதுடைய திருடன் ஒருவன் திருடச் சென்றுள்ளான் அங்குள்ள ஒரு அறையில் AC இருந்ததை கண்ட அந்த திருடன் ஏ.சியை ஆன் செய்து அந்த அறையில் இருந்த பொருட்களை திருடி உள்ளான்.
ஏற்கனவே பதுபோதையில் இருந்து அந்த திருடனுக்கு AC காற்று நல்ல தூக்கத்தை வரவழைக்க அங்கேயே படுத்து உறங்கியுள்ளான்.
இதையடுத்து வெளியில் சென்றிருந்த வீட்டின் உரிமையாளர் வந்து கதவை திறந்ததும் திருடன் படுத்துக் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார் .
பின்னர் திருடனின் தூக்கத்தை கலைக்காமல் போலீசுக்கு உரிமையாளர் தகவல் கொடுத்துள்ளார். உடனனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மதுபோதையில் இருந்த திருடன் AC காற்றில் ஒய்யாரமாக தூங்கிக்கொண்டிருந்த திருடனை எழுப்பி கைது செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் திருடச் சென்ற வீட்டில் ஏசி காற்றில் இதமாக உறங்கிய திருடனை ( horrifying incident ) in UP போலீசார் வந்து எழுப்பி கைது செய்துள்ள சம்பவம் நகைப்பையும் சற்று பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.