விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்(thirumavalavan) காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் யாரும் வரும் 30 ஆம் தேதி வரை அவரை சந்திக்க வர வேண்டாம் என்று கட்சியின் சார்பில் நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.