இம்மானுவேல் சேகரனாருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததை தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவன்(thirumavalavan) நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
தியாகி இம்மானுவேல் சேகரனின் 66வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.பரமக்குடியில் அவரது நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,வைகோ உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு மனிபண்டபம் அமைக்க பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது.
அந்த வகையில்,66வது நினைவு தினத்தை முன்னிட்டுஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்காகப் போராடிய தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவு நாளில்,பரமக்குடியில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்த்து முதல்வரின் இந்த அறிவிப்புக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.
(தியாகி இம்மானுவேல் சேகரனார்1942-இல் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறைவாசம் சென்றார். மேலும் ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்காகவும் போராடியவர் குறிப்பிடத்தக்கது.)