மக்களவை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைக்கு (Thirumavalavan) விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் மக்களை கவரும் வகையில் தங்களது தேர்தல் அறிக்கையினை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சி முக்கிய வாக்குறுதிகளுடன் கூடிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த தேர்தல் அறிக்கைக்கு இந்தியா கூட்டணி கட்சிகள் வாழ்த்தும் வரவேற்பும் தெரிவித்து வரும் நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசுப்பணியில் பெண்கள் இட ஒதுக்கீடு ஒரு புரட்சிகரமான திட்டம்.
இட ஒதுக்கீட்டில் 50 சதவீத உச்ச வரம்பை உயர்த்துவது விளிம்பு நிலை மக்களின் வாழ்வை உயர்த்தும் நல்ல திட்டம்.
நீட் தேர்வில் மாநில அரசின் முடிவிற்கே விடுவது நம்பிக்கையளிக்கிறது.
பொதுப் பட்டியலில் உள்ளவற்றை மாநில பட்டியலுக்கு மாற்றுவது மாநில மக்களின் உணர்வுகளை மதிப்பதாக உள்ளது.
சிறுபான்மையினருக்கு கல்வி உதவித்தொகை மீண்டும் வழங்குவது நல்லது.
இத்தேர்தல் அறிக்கை இந்தியாக் கூட்டணிக்கு வலுச்சேர்க்கும் என திருமாவளவன் (Thirumavalavan) தெரிவித்துள்ளார்.