Thiruvalluvar idol-திருவண்ணாமலை வேட்டவலம் சாலை சந்திப்பில் புனரமைக்கப்பட்ட அய்யன் திருவள்ளுவர் திருவுருவ சிலையை அமைச்சர் எ.வ.வேலு திறந்துவைத்தார்.
ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தின் இரண்டாம் நாள் திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வள்ளுவரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அவரது சிலைக்கு தமிழ் ஆர்வலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ,திருவண்ணாமலை வேட்டவலம் சாலை சந்திப்பில் புனரமைக்கப்பட்ட அய்யன் திருவள்ளுவர் திருவுருவ சிலையை அமைச்சர் எ.வ.வேலு திறந்துவைத்தார்.
திருவண்ணாமலை வேட்டவலம் – திருக்கோயிலூர் சாலை சந்திப்பில் கடந்த 1998ஆம் ஆண்டு திருக்குறள் நெறிபரப்பும் திருக்குறள் சமுதாய நிறுவனர் கேப்டன் சுவாமிநாதன் மூலம் அய்யன் திருவள்ளுவர் திருவுருவ சிலை நிறுவப்பட்டது .
அப்போதைய தமிழ்நாடு வீட்டு வசதி துறை அமைச்சரும் தற்போதைய தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் திறந்துவைத்தார்.
கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சாலை விரிவாகத்திற்காக அய்யன் திருவள்ளுவர் சிலை அகற்றப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் அமைச்சர் எ.வ.வேலு பெருமுயற்சியில் தனது சொந்த செலவில் அய்யன் திருவள்ளுவர் சிலை புனரமைக்கப்பட்டது.
இதன் திறப்பு விழா துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தலைமையில் நடைபெற்றது. இந்தவிழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ,
தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு புனரமைக்கப்பட்ட அய்யன் திருவள்ளுவர் திருவுருவ சிலையை(Thiruvalluvar idol) திறந்துவைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து இந்த விழாவில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி கூடுதல் ஆட்சியர் செ.ஆ.ரிஷப் மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன்,
நகரமன்ற தலைவர் நிர்மலாவேல்மாறன், துணை தலைவர் சு.ராஜாங்கம் திருக்குறள் நெடுஞ்சாலைத்துறை வட்ட கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல் கோட்ட பொறியாளர் ராஜ்குமார் உதவிகோட்ட பொறியாளர் கே.ரகுராமன்
தாசில்தார் மு.தியாகராஜன் நகராட்சி நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் திருக்குறள் நெறிபரப்புநர்கள் தமிழ்சங்க நிர்வாகிகள் வர்த்தக சங்க பிரதிநிதிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.