Thiruvalluvar in saffron dress : நீண்ட தாடி, தலையில் மடித்துக் கட்டப்பட்ட ஜடாமுடி, வெள்ளுடை, ஒரு கையில் பனை ஒலை, மறு கையில் எழுத்தாணி என்று அடையாளம் காட்டப்பட்ட திருவள்ளுவருக்கு,
திடீரென காவி உடை தரித்து கடந்த திருவள்ளுவர் தினத்தன்று ஆளுநர் ஆர்.என்.ரவி, சமூக ஊடகங்களில் வெளியிட்ட புகைப்படம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
சனாதன துறவி என்று ஆளுநர் கூறியிருந்ததற்கு பதிலடி தரும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின், வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது என்று கூறியிருந்தார்.
வள்ளுவரின் வெள்ளுடை உருவம் என்பது கடந்த 1959ஆம் ஆண்டு பாரதிதாசன் மேற்பார்வையில், ஓவியர் வேணுகோபால் சர்மா வரைந்தளித்ததாகும்.
1960ல் வள்ளுவரின் படம் வரைந்து முடிக்கப்பட்ட பின்னர், தஞ்சை ராமநாத மன்றத்தில் 49 தமிழ் புலவர்களைக் கொண்டு மாநாடு நடத்தப்பட்டு,
அவர்களால் சாதி, மத, சமய அடையாளங்கள் இல்லாத வள்ளுவரின் புகைப்படத்தை ஏற்றுக் கொண்டு அப்போதைய அரசால் அஞ்சல் தலையாகவும் வெளியிடப்பட்டது.
அதன் பின்னர் வள்ளுவரின் அந்த படம் அரசுடைமையாக்கப்பட்டு, பள்ளிகள், கல்லூரிகள், பேருந்துகள், காவல்நிலையங்கள் என அரசு சார்பான இடங்களிலும் நிறுவப்பட்டது.
1991ல் அந்தப் படம் நாட்டுடமையாக்கப்பட்டதை தொடர்ந்து, நாட்டில் உள்ள அனைவரும் அதனை அச்சிட்டு பயன்படுத்தி வருகின்றனர்.
அரசு அங்கீகரித்த புகைப்படத்தை மாற்றி, சாதி, மத, சமயம் சார்ந்து அவர் புகைப்படத்தை வெளியிடுவது சட்டத்திற்குப் புறம்பானதாகும்.
இதையும் படிங்க : ”பா.ஜகவும், அதிமுகவும் ப்ராடு கம்பெனி”பொளந்து கட்டும் டி.கே.எஸ். இளங்கோவன்!
இந்த சூழலில், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட, தெய்வசிகாமணி பட்டிணம் பகுதியில் உள்ள அரசு பள்ளியின் சுற்றுச் சுவரில் காவி உடையில் திருவள்ளுவரின் படம் (Thiruvalluvar in saffron dress) வரையப்பட்டுள்ளது.
வ.உ.சி., சுபாஷ் சந்திரபோஸ், பாரதி, காந்தி, நேரு என்று தலைவர்களின் உருவப்படம் வரையப்பட்டுள்ள அந்த சுவரில், அரசுவிதிகளை மீறி,
காவி உடையில் அரசுப் பள்ளியிலேயே படம் வரையப்பட்டு இருப்பது புதிதாக பஞ்சாயத்தை கூட்டியிருக்கிறது.