திருவண்ணாமலை கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் 7 பேர் சிக்கிய நிலையில் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் மீட்பு பணிகளின் லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.
புயலால் ஏற்பட்ட கனமழையின் காரணமாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ள மலை உச்சியில் சுமார் 100 அடி உயரத்தில் இருந்து பாறை ஒன்று உருண்டு வந்தது.
அந்த பாறை, வ உ சி. நகர் தெருவில் வீடுகளின் மீது விழுந்தில் 2 வீடுகளில் இருந்த 7 பேர் மண்ணுக்குள் சிக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
Also Read : புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.5000 நிவாரணம் அறிவிப்பு..!!
இதில் 5 குழந்தைகள் உட்பட 7 பேர் மண் சரிவில் சிக்கிய நிலையில், 3 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது
மீட்கப்பட்ட உடல்களை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்கள் தயாராக உள்ளன
சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் உள்ளனர்
மழை குறுக்கிட்ட போதிலும் 12 மணி நேரத்தீற்கும் மேலாக மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.