பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் கைதான ரவுடி திருவேங்கடம்
என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யபட்டது குறித்து போலீசார் விளக்கம் கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் தரப்பில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்தில் கூறிருப்பதாவது :
ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் கைதான கொலையாளிகளில் ஒருவரான திருவேங்கடத்தை, விசாரணைக்காக போலீசார் இன்று காலை புழல் நோக்கி அழைத்துச் சென்றுள்ளனர்
மாதவரம் ஆட்டுத்தொட்டி அருகே செல்லும் போது ரவுடி திருவேங்கடம் தப்பி ஓடியுள்ளார்.
இதையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு அவரை தேடும் போது, புழல் வெஜிடேரியன் நகரில் உள்ள தகர கொட்டாயில் திருவேங்கடம் பதுங்கி இருந்துள்ளார்
பின்னர் திருவேங்கடத்தை போலீசார் சுற்றி வளைக்கும் போது, ஏற்கனவே அங்கு பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து திருவேங்கடம் சுட்டுள்ளார்
Also Read : அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு..!!
இதனை அடுத்து காவல் ஆய்வாளர் திருவேங்கடத்தை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், திருவேங்கடம் வயிறு மற்றும் மார்பில் குண்டு பாய்ந்துள்ளது
துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் சுருண்டு விழுந்த திருவேங்கடத்தை மாதரவத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்
திருவேங்கடம் பதுங்கியிருந்த தகர கொட்டாயில்தான் ஆம்ஸ்ட்ராங் கொலைச் சதி திட்டமிடப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.