திமுக ஆட்சி பொறுப்பேற்று 16 மாதங்களில் ஊழல் பெருகி வருகின்றன குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன அண்ணாமலை குற்றச்சாட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக கட்சி எப்பொழுதுமே தேசிய மாடலா, திராவிட மாடலா என்று விவாதிக்க தயாராக இருக்கிறோம் என அமைச்சர் பொன்முடி கேள்விக்கு அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டில் பிரதமர் நரேந்திர மோடியின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு மத்திய அரசு நலத்திட்ட பிரிவு சார்பில் இரண்டு நாள் கண்காட்சி நிகழ்ச்சியை மாநில பாஜக தலைவர் அண்ணாமலை துவங்கி வைத்தார்.
பின்னர் அதனை பார்வையிட்டார் பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அண்ணாமலை, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உடைய வாழ்க்கையை பற்றி இரண்டு நாள் கண்காட்சி திறந்து வைப்பதற்காக வந்து உள்ளேன்.
பெரிய அளவிலேயே கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தொகுதியில் உள்ள பொதுமக்கள் கண்காட்சியை வந்து பார்க்க வேண்டும். மண்டபத்தின் கீழ் பகுதியில் மத்திய அரசின் திட்டங்கள், அதனுடைய பயன்பாடுகள் அனைத்தும் கீழ் பகுதியில் உள்ளது.
முதல் தளத்தில் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு அவர் பிறந்ததிலிருந்து 72 கால வாழ்க்கை வரலாறு, அவருடைய கண்காட்சிகள் இருக்கிறது. இதனை பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொண்டு பார்க்க வேண்டும் என பாஜக சார்பில் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
ஆளுநர் முதல்வரைப் பற்றி பாராட்டி பேசியது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, ஆளுநர் என்ன கருத்து கூறியிருந்தாலும் அது அவருடைய கருத்து எனவும், கூடங்குளத்தில் ஆரம்பித்து எட்டு வழி சாலை, பல என்ஜிஓக்கலை அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது.
ஸ்டெர்லைட் ஆலையில் ஆரம்பித்தது இன்று காப்பருடைய விலை அதிகரித்துள்ளது. காப்பர் விலை அதிகரிப்பால் அதனுடன் சார்ந்த விலைகள் அதிகரித்துள்ளது. திமுக 15 மாத கால ஆட்சியில் குற்ற சம்பவங்கள் ஊழல்கள் நிறைந்து வருகின்றன இதிலும் பொதுவாக பாரதிய ஜனதா கட்சி மீது பெட்ரோல் குண்டு வீச்சுதல் போன்ற செயல்களில் வன்முறையில் நடந்து வருகின்றன .
தற்பொழுது பாஜக கட்சியினர் அமைதியாக இருந்து வருகின்றன பாஜக கட்சி எப்பொழுதுமே தேசிய மாடலா, திராவிட மாடலா என்று விவாதிக்க தயாராக இருக்கிறோம் என பேசினார்.
மேலும் பொன்முடி விவாதிக்க தயாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை கட்சியின் துணைத் தலைவரை விவாதிக்க நாங்கள் அனுப்புகிறோம் எந்த நேரம் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அண்ணன் தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்