நிலவில் சந்திரயான் 3 விக்ரம் லேண்டரை தரையிறக்கி மாபெரும் சாதனை படைத்த இஸ்ரோ தலைவர் சோம்நாத், திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் உள்ளிட்ட விஞ்ஞானிகள் அனைவருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகில் சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்றான இந்தியா தற்போது தங்களது வளர்ச்சியை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளது.

இந்தியாவின் விண்வெளி ஆராச்சி நிலையமான இஸ்ரோவின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் 14 ஆம் தேதி அன்று இஸ்ரோ விஞ்ஞானிகளால் சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது .
இந்நிலையில் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக LVM MK 3 ராக்கெட்டில் அனுப்பட்ட 3900 கிலோ எடை கொண்ட சந்திராயன் 3 விண்கலம் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி பூமியின் சுற்றுப்பாதையை முடித்து நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கியது.
திட்டத்தட்ட 41 நாட்கள் பயணத்திற்கு பின் நேற்று மாலை சந்திராயன் 3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது .இந்நிலையில் சந்திராயன் 3 அடைந்த மாபெரும் வெற்றிக்கு திரைபிரபலன்கள் , அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களும் அவர்களும் தனது வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அன்புமணி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறிருப்பதாவது :
நிலவில் தரையிறங்கியது சந்திரயான் 3 : இந்திய விண்வெளி வரலாற்றில் இந்நாள் பொன்னாள் – மகிழ்ச்சி!!!
ஸ்ரீஹரிஹோட்டாவிலிருந்து ஜூலை 14-ஆம் நாள் வெண்வெளிக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் பல்வேறு கட்ட பயணங்களுக்குப் பிறகு இன்று மாலை நிலவில் தரையிறக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்துள்ள முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

இந்த நாள் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் பொன் நாள். இந்த வரலாற்று சாதனையை படைத்த இஸ்ரோ தலைவர் சோம்நாத், திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் உள்ளிட்ட விஞ்ஞானிகள் அனைவருக்கும் பாராட்டுகள். விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா மேலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துகள் என அன்புமணி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டள்ளது.