நடிகை கத்ரீனா திருமணத்திற்கு புகைப்படம்,வீடியோ எடுக்க தடை: வெளியான பலகோடி ரூபாய் ஒப்பந்தம் செய்தி..!

நடிகை கத்ரீனா கைஃப் திருமணத்தை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கவேண்டாம் என கூறியதற்கு காரணம் என்னவென்று தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்பும் நடிகர் விக்கி கௌசலும் காதலித்தது வந்த நிலையில் இருவருக்கும் வரும் 9 ஆம் தேதி ராஜஸ்தானில் 700 ஆண்டுகள் பழமையான கோட்டையில் திருமணம் நடைபெற உள்ளது.

இத்திருமணத்திற்காக நடிகை கத்ரீனா கைப் தனது காதலர் விக்கி கௌசலுடன் மும்பையில் இருந்து நேற்று (6.12.2021) ராஜஸ்தானுக்கு புறப்பட்டுச் சென்றார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று (7.12.2021) தொடங்கி வரும் 9 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்க இருக்கும் இத்திருமணத்திற்கு வெறும் 120 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு பாலிவுட் நடிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வரக்கூடும் என்பதால் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சவாய் மதோப்பூரில் உள்ள கோட்டையைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கத்ரீனா கைஃப் – விக்கி கௌசல் திருமணத்தில் செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட திருமண அழைப்பிதழில்,” உங்களை காண ஆவலுடன் உள்ளோம். திருமணத்தில் யாரும் செல்போனை பயன்படுத்தாதீர்கள், இங்கு நடக்கும் நிகழ்வுகளை யாரும் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ளவும்” எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தான் கத்ரீனா கைஃப் திருமண நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்ய ஒடிடி தளம் ஒன்று ரூ.100 கோடி தர முன் வந்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்துடன் கத்ரீனா கைஃப் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகவும், தற்போது இதில் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.அதுமட்டுமின்றி, அமேஸான் பிரைம் நிறுவனம் கத்ரீனாவின் திருமணத்தை ஒளிபரப்பு செய்ய ரூ.80 கோடிக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறது.இதனால்தான் திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள் யாரும் வீடியோ அல்லது போட்டோ எடுக்கக்கூடாது என்று கத்ரீனா கைஃப் உத்தரவாதம் பெற்றது தெரிய வந்துள்ளது.

Total
0
Shares
Related Posts