தம்பதியர் இடையே ஒற்றுமை ஏற்படவும், பிரிந்த சென்ற ஜோடி மீண்டும் திரும்ப வரவும், அன்பும் காதலும் அதிகரிக்கவும் ஆன்மீக ரீதியாக சில பரிகாரங்களை செய்ய வேண்டும். சுத்தபத்தமாக குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் ஒரு கண்ணாடி டம்ளரை எடுத்துக் கொண்டு பூஜை அறையில் அமைதியாக அமர வேண்டும்.
பின்னர் அந்த டம்ளரில் முக்கால் பாகம் தண்ணீரை நிரப்பிக் கொள்ள வேண்டும். அதோடு 27 மிளகுகள் மற்றும் இருபத்தி ஏழு கல் உப்புகளை எண்ணி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது கணவன் மனைவி இடையே சண்டை தீர வேண்டும்.. பிரிந்து சென்ற ஜோடி மனம் மாறி திரும்பி வர வேண்டும் என்று மனதார நினைத்துக்கொண்டு, கண்ணாடி டம்ளருக்குள் இருக்கும் தண்ணீரில் ஒரு கல் உப்பு, ஒரு மிளகு என ஒவ்வொன்றாக எடுத்து போட்டு கொண்டு வர வேண்டும்.
எல்லா மிளகு மற்றும் கல் உப்புகளையும் போட்டு முடித்த பின்பு மனதார உங்கள் பிரச்சனையை நினைத்து கடவுளை வேண்டிக் கொள்ள வேண்டும். மனதார வேண்டிக் கொண்ட பின் அந்த கண்ணாடி டம்ளரை எடுத்துக் கொண்டு போய் நீர் நிலைகளில் ஓடும் தண்ணீரில் கரைத்து விட வேண்டும்.
அருகில் நீர் நிலைகள் எதுவும் இல்லாத பட்சத்தில் வீட்டின் கூரையின் மேல் கால் படாத இடத்தில் ஊற்றி விட வேண்டும். இந்த பரிகாரத்தை செய்த சிறிது நாட்களிலேயே நிச்சயம் நல்லதொரு மாற்றம் தெரியும். அதோடு..
ஓம் ஹும் ஜும் சஹ
அர்த்தநாரீஸ்வர ரூபே
ஹ்ரீம் ஸ்வாஹா
இந்த மந்திரத்தை தினமும் பூஜையின் போது சொல்லி வந்தால் விரைவில் பிரிந்து சென்ற ஜோடி மனம் மாறி திரும்பி வருவார். மேலும், தினமும் அதிகாலையில் கிழக்கு முகமாக அமர்ந்து..
”ஓம் சௌம் பார்வதி தேவி நமஹ”
என்று ஆத்மார்த்தமாக 54 முறை அல்லது 108 முறை ஜபித்து வந்தால் குடும்பத்தில் நிம்மதி பரவும். பிரிந்த தம்பதி விரைவில் ஒன்று சேருவார்கள்.
மேலும், திங்கட்கிழமையில் சிவபெருமான் பார்வதி தேவியுடன் இணைந்து இருக்கும் படத்திற்கு வில்வ அர்ச்சனை செய்து சிவபெருமான் மற்றும் பார்வதி தேவிக்கு உரிய மந்திரங்களை ஜபித்து வந்தாலும் கணவன் மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும்.