குஜராத் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தீவிரம் காட்டி வருகிறார். பா.ஜ., நலத்திட்டங்களை அறிவிக்க, தேர்தல் தேதி அறிவிப்பை சில நாட்களாக தாமதப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து நரேந்திர மோடி அங்குமிங்கும் ஓடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இம்முறை காங்கிரஸ் கட்சி மட்டுமின்றி ஆம் ஆத்மி கட்சியும் வழக்கம் போல் இலவசங்களை கொடுத்துவிட்டு தேர்தல் களத்தில் நிற்கிறது.
இதனால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தல் பணிகளுக்கு இடையே பாவ்நகரில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதில் தந்தையை இழந்த 551 பெண்கள் ஒரே மேடையில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தை பிரதமர் மோடி நடத்தி வைத்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய மோடி, “சொந்த ஊருக்கு சென்று, உறவினர்களை அழைத்து, மீண்டும் திருமணம் செய்து கொண்டு பணத்தை வீணடிக்காதீர்கள். உங்களிடம் அதிக பணம் இருந்தால், அதை குழந்தைகளுக்காக சேமிக்கவும். முன்பெல்லாம் கடன் வாங்கி திருமணங்களை பிரமாண்டமாக நடத்தி வந்தனர். ஆனால், தற்போது ஒரே இடத்தில் அதிக நபர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது,” என்றார்.
இந்த திருமணத்திற்கு பிறகு பிரதமர் மோடி வல்சாத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டார். ஒவ்வொரு குஜராத்தியும் அதில் முழு நம்பிக்கை கொண்டவர்கள். ஒவ்வொரு குஜராத்தியும் உள்ளத்தில் இருந்து பேசுகிறார்கள். ஒவ்வொரு குஜராத்தியின் இதயத்திலிருந்தும் நான் இந்த குஜராத்தை உருவாக்கினேன். குஜராத்தை களங்கப்படுத்த நினைப்பவர்கள் இங்கிருந்து அகற்றப்படுவார்கள்.
குஜராத்திகள் ஒருபோதும் வெறுப்பாளர்களை ஏற்றுக்கொண்டதில்லை. களங்கம் ஏற்படுத்த நினைப்பவர்கள் நிராகரிக்கப்படுவார்கள். இந்தத் தேர்தலிலும் அதுதான் நடக்கும். 20 வருடங்களாக குஜராத்தை அவமதிக்கும் கும்பல்களும், குஜராத்தை அவமதிக்க வழி தேடும் கும்பல்களும் குஜராத்தில் இருந்து வருகிறது.
அதனால் அவர்கள் சிக்கலை எதிர்கொள்கின்றனர். குஜராத் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முடியவில்லை. குஜராத் மக்கள் இரவும் பகலும் உழைத்து வருவதால் அவர்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முடியவில்லை,” என்றார்.