கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீசும் அணி காலம் தாழ்த்துவதை தடுக்க புதிய விதியை சோதனை அடிப்படையில் அமல்படுத்த உள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
உலகில் கால்பந்து விளையாட்டிற்கு பின் அதிக ரசிகர்கள் பட்டாளம் இருக்கும் விளையாட்டு கிரிக்கெட் தான். கோடான கோடி ரசிகரக்ள் கண்டுகளிக்கும் இந்த விளையாட்டில் பல விதிமுறைகள் பழைய படி இருந்து வந்தாலும் சில விதிமுறைகள் காலத்திற்கேற்ப மாற்றப்பட்டு வருகிறது .
இந்நிலையில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஒவ்வொரு ஓவருக்கு இடையிலும் 60 நொடிகள் மட்டுமே பவுலிங் செய்யும் அணி நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும் என புதிய விதியை சோதனை அடிப்படையில் கொண்டு வர உள்ளதாக ICC அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
பவுலிங் செய்யும் அணி கொடுக்கப்பட்ட நேரத்தை 3 முறை மீறினால் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் பெனால்டியாக வழங்கப்படும் என்றும் ICC தெரிவித்துள்ளது.
கடந்த சில போட்டிகளில் பந்துவீசும் அணி நிறைய முறை காலம் தாழ்த்துவதை கருத்தில் கொண்டு இந்த புதிய விதியை சோதனை அடிப்படையில் அமல்படுத்த உள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.