உடலில், கெட்ட கொலஸ்ட்ரால் (cholestral level) அதிகரிப்பது ஒரு அபாய எச்சரிக்கை. இது போன்ற சூழ்நிலையில், நாம் அன்றாட உணவில் சில மாற்றங்களை செய்தால் எதிர்காலத்தில் வரும் பிரச்சனைகள் சரியாக்க வாய்ப்பு உள்ளது.
அதிக கொலஸ்ட்ரால் (cholestral level) உடலில் சேர்வது பல பிரச்சனைகளுக்கு காரணமாக வழி வகுக்கிறது. இதற்கு, இன்றைய குழப்பமான வாழ்க்கை முறையும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களும் முக்கிய காரணமாக உள்ளது. நம் உணவில் அதிக எண்ணெய் மற்றும் காரமான உணவுகளை சேர்த்துக் கொள்வதனால் உடலில் கெட்ட கொழுப்பு சேர ஆரம்பித்து ரத்த நாளங்களில் அடைப்பு அதிகரிக்கிறது.
இது போன்ற சூழ்நிலையில், உயர் ரத்த அழுத்தம் மாரடைப்பு என ஆபத்துகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனை சில இயற்கை பானங்கள் குடிப்பதன் மூலம் கெட்ட கொழுப்பின் அளவை குறைக்க முடியும். ஓட்ஸ் கஞ்சி காலை உணவுக்கு எடுத்துக் கொள்வதனால் கெட்ட கொலஸ்ட்ராலை உறிஞ்சுவதற்கு உதவுகிறது.
இது தமனிகளில் உள்ள அடைப்பை நீக்குகிறது. எனவே, தினமும் ஒரு டம்ளர் ஓட்ஸ் பானத்தை குடித்து வருவதன் மூலம் கெட்ட கொழுப்புகள் உடலில் சேர்வதை தவிர்க்க முடியும்.
பிளாக் பெர்ரிகள், ஸ்ட்ராபெர்ரிகள் போன்ற பழங்களில் நிறைய நார்சத்து உள்ளதால் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. இதற்காக, பெர்ரிகளின் உதவியோடு ஸ்மூத்திகள் செய்து தொடர்ந்து குடித்து வருவதன் மூலம் உடலில் கெட்ட கொழுப்புகள் சேர்வதை சரி செய்ய முடியும்.
தக்காளி வீடுகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் ஒரு காய்கறி. இதில், லைகோபின் கலவை கலந்து உள்ளதால் கெட்ட கொழுப்பை குறைக்கும் சக்தி இதற்கு இருக்கிறது. இதில், உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுகிறது. மேலும், கிரீன் டீ குடிப்பது உடல் நலத்திற்கு நல்லது ஏனென்றால், பல வகையான ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் இருப்பதால் ரத்தத்தில் இருக்கும் கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து மாரடைப்பு அபாயம் வெகுவாக ஏற்படுவதை குறைக்கிறது. மேலும், தேவையற்ற எடையும் குறைய தொடங்குகிறது. ஒரு நாளைக்கு இரண்டிலிருந்து மூன்று கப் கிரீன் டீ குடித்து வரலாம்.