திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் ஏப்ரல் (April) மாதத்திற்கான சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
உலக பிரசித்திபெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பெரும்பாலான பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப நடைபாதை வழியாக திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்வது வழக்கம்.
தினம்தோறும் ஏரளமான பக்தர்கள் நம்பிக்கையுடன் தங்கள் வாழ்வில் சிறக்க வேண்டும் என்று திருப்தி ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வரக்கூடிய பக்தர்கள் இலவச தரிசனத்தில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க பல கோரிக்கைகள் வைக்கப்பட்டு
வருகிறது .
இருப்பினும் ஏழை எளிய மக்கள் திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த டோக்கன்கள் வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பையொட்டி கூட்ட நெரிசலை தவிர்க்க கடந்த 23ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை மொத்தமாக தேவஸ்தானம் சார்பில் வழங்கப்பட்டது.
டோக்கன்கள் மற்றும் ஆன்லைனில் வழங்கப்பட்ட ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயில் ஏப்ரல் மாத தரிசனத்துக்கான ரூ.300 கட்டண ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு நாளை முதல் தொடங்க உள்ளது .
நாளை காலை 10 மணிக்கு தேவஸ்தானத்தின் இணையதளம் பக்கத்தில் இந்த முன் பதிவு வெளியாகிறது.
tirupatibalaji.ap.gov.in என்ற இணையதள பக்கத்தில் முன்பதிவு (April) செய்து கொள்ளலாம் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி மலைப்பாதையில் செல்லும் பக்தர்கள் அங்குள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி சன்னதியில் சாமி கும்பிட்டு சிறிது நேரம் ஓய்வு எடுத்து செல்வது வழக்கம்.
இப்படி இருக்கும் நிலையில் கடந்த சில மாதங்களாக அப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் இருந்ததால் பக்கதர்கள் பயந்துகொண்டே தரிசனம் செய்து வருகின்றனர்.
Also Read : https://itamiltv.com/devotees-are-allowed-in-ram-temple/
இதன்காரணமாக பக்தர்கள் தனியாக செல்லக்கூடாது, குழுவாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து பக்தர்களுக்கும் வனத்துறை சார்பில் மூங்கில் கம்பு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர 100 படிக்கட்டுகளுக்கு ஒரு போலீசார் மற்றும் வனத்துறையினர் கயிறு கட்டி தடுப்பு ஏற்படுத்தி முகாமிட்டுள்ளனர்.