10 ஆம் வகுப்பு பொது தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்து தற்கொலைக்கு முயற்சி செய்த மாணவனுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கி உள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு மருத்துவ மனையில் ,திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்து ராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மருத்துவமனை நிலவரம் குறித்தும் செயல்பட்டு வரும் வழிமுறைகள் குறித்தும்,சிறப்பு சிகிச்சை பிரிவு பொது மருத்துவம், சித்த மருத்துவம் ஸ்கேன் மையம், எப்படி கருவிகள் டயாலிசிஸ் போன்ற கருவிகள் முறையாக செயல்பட உள்ளனவா என்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்பகுதிக்கு வரும் போது மக்கள் அரசு மருத்துவமனையை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை கேட்டு அறிந்து கொண்டார்.
பொதுமக்கள் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டு இருந்த நிலையில், புகார்கள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
குறிப்பாக குடிநீர் வசதி, கழிப்பிட வசதி இல்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்த நிலையில், முறையாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் குறைவான மதிப்பின் எடுத்ததால் தற்கொலைக்கு முயற்சி செய்த அண்ணாநகரை சேர்ந்தஅனிஷ் என்ற மாணவனை சந்தித்து ஆறுதல் கூறினார்.
மதிப்பெண் குறைவாக எடுத்தால் எந்த விதமான பிரச்சினையும் இல்லை வாழ்க்கையில் முன்னேற தொடர்ந்து உழைக்க வேண்டும். பத்தாம் வகுப்பு நானும் குறைவான மதிப்பெண் தான் எடுத்தேன்.
ஆனால் இப்பொழுது மாவட்ட ஆட்சியராக இருக்கிறேன் .அதனால் முயற்சியை கைவிடாதே என மாணவனுக்கு ஆறுதல் கூறினார். தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது