25 வருடங்களை கடந்த காதல் காவியம்… மீண்டும் 3D-ல் ரிலீஸ் ஆகும் `டைட்டானிக்’ (Titanic 3D) – படக்குழு அறிவிப்பு…
உலகம் முழுவதும் பிரம்மாண்ட வெற்றி பெற்ற ’டைட்டானிக்’ (Titanic 3D) திரைப்படம் புதுப்பொலிவுடன் 3D-ல் மீண்டும் திரைக்கு வருகிறது.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், 1997ஆம் ஆண்டு வெளியான படம் ‘டைட்டானிக்’. இந்த படம் 1912ஆம் ஆண்டு அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான படம்.
இந்நிலையில், இப்படம் உலகம் முழுவதும் பிரம்மாண்ட வெற்றி பெற்ற நிலையில், 11 ஆஸ்கர் விருதுகளைக் குவித்தது. மேலும், இப்படத்தில் நடித்த ‘லியார்னாடோ டிகாப்ரியோ’ மற்றும் ‘கேட் வின்ஸ்லெட்’ இருவரும் பெரும் புகழை அடைந்தனர்.
இந்நிலையில், தற்போது இந்தப் படம் மீண்டும் புதுப்பொலிவுடன் 3Dயில் திரைக்குவர இருக்கிறது. டைட்டானிக் படம் வெளியாகி 25 வருடங்கள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக, இந்த சர்ப்ரைஸ் அறிவிப்பை டைட்டானிக் படக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, 25ஆண்டுகள் கொண்டாட்டமாக வரும் பிப்ரவரி 10ம் தேதி 3D-யில் டைட்டானிக் படம் ரீ-ரிலீஸ் ஆக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும், இந்த அறிவிப்பை அடுத்து நியூ டைட்டானிக் படத்திற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.