தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் (TMC) அசோகன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதி உள்ள கடிதத்தில் கூறிருப்பதாவது :
என்னுடைய தலைமை நிலைய செயலாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதிவியிலிருந்தும் என்னை விடுவிக்க வேண்டி இந்த கடிதத்தை எழுதுகிறேன் .
நான் பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தைச் சார்ந்தவன். என் தந்தை ஒரு சுதந்திர போராட்ட தியாகி, 1980யில் நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நின்று வெற்றி வாய்பை இழந்தவர்,
என் தந்தையை தொடர்ந்து நானும் என்னை காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைத்துக் கொண்டு செயலாற்றி வந்துள்ளேன்.
1996யில் மறைந்த மக்கள் தலைவர் ஐயா அவர்கள் எடுத்த அரசியல் ரீதியான முடிவை அன்று ஏற்றுக் கொண்டு அவருடன் தமிழ் மாநில காங்கிரஸில் பயணித்து
அதில் மாநில பொதுக்குழு மற்றும் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வந்துள்ளேன். அதே போல அவருடைய மறைவுக்கு பின் அவருடைய புதல்வராகிய தங்களின் தலைமையை ஏற்று
தங்களின் மேலான தலைமையின் கீழ் தலைமை நிலை செயலாளராக இன்று வரை பணியாற்றி வந்துள்ளேன்.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தாங்கள் எடுத்துள்ள பா.ஜ.க கூட்டணி என்பது எனக்கு உளவியல் ரீதியாக ஏற்புடையதாக இல்லை.
எனவே கனத்த இதயத்துடன் தங்களின் மேலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து இன்று (26.02.2024) முதல் விலகிக் கொள்ள முடிவு செய்துள்ளேன்.
என்னுடைய முடிவை ஏற்றுக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என அசோகன் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
தமிழகத்தில் பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டுள்ள நிலையில் இந்த இரு கட்சிகளுடன் கூட்டணியில் இருந்தவர்கள் தற்போது யாருடன் கைகோர்ப்பது என்று தெரியாமல் குழம்பி போய் உள்ளனர்.
Also Read : https://itamiltv.com/tn-cm-inauguration-the-renovated-anna-and-kalaingar-memorials/
இந்த நிலையில் பாஜக உடன் ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணியை உறுதி படுத்தியுள்ளது.
நாளை பல்லடத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் (TMC) பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதாகவும் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.