விருதுநகர் மாவட்டத்தில் விதிமீறலில் ஈடுபடும் பட்டாசு உரிமையாளர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிவகாசி மாவட்டம் சுதர்சன் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து, பட்டாசு தயாரிப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அறிக்கை விடுத்துள்ளார்.
அதில், விதிமீறல்களை கண்டறிய நான்கு சிறப்பு ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் சரிவர ஆய்வு செய்யாத அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
இதையும் படிங்க: 10 பேர் உயிரை பறித்த பட்டாசு ஆலை விபத்தில் பட்டாசு ஆலை மேற்பார்வையாளர் கைது..!!
பட்டாசு ஆலைகளில் உள்வாடகை மற்றும் உள்குத்தகை மற்றும் அனுமதிக்கப்பட்ட அளவினை விட கூடுதலாக ரசாயனங்கள் மற்றும் தொழிலாளர்களை பயன்படுத்தும் தொழிற்சாலைகளின் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்
மேலும் சட்டத்திற்கு புறம்பான வழிகளில் விதிகளை மீறி பட்டாசு உற்பத்தியில் ஈடுபடும் உரிமதாரர்கள், போர்மேன் ஆகியோர் மீது குற்ற வழக்குகள் மற்றும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும்
தொடர்ந்து பட்டாசுத் தொழிற்சாலைகள் மற்றும் பட்டாசு கடைகளில் சட்டத்திற்கு புறம்பாக விதிகளை மீறில் இருந்தால் 94439 67578 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் மற்றும் பட்டாசுத் தொழிலில் ஈடுபடுபவர்கள் தெரிவிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.