4ஆண்டு பி.எட்., பட்டப் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பதை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் இணைப்பு அந்தஸ்து பெற்றுள்ள கல்வியியல் கல்லூரிகளில் பி.எஸ்சி., பி.எட்., பி.ஏ., பி.எட்., படிப்புகளில் 2023-24-ஆம் கல்வியாண்டில் சேருவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
பி.எஸ்சி., பி.எட்., பி.ஏ., பி.எட்., படிப்புகளுக்கு ஒரு பருவத்துக்கு 125 வேலை நாள்களில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.) தெரிவித்துள்ளது.
மேலும் பி.எஸ்சி., பி.எட்., பி.ஏ., பி.எட்., படிப்புகளுக்கு மாணவர்கள் அனைத்து விவரங்களையும் சரியாக பூர்த்தி செய்து,விண்ணப்பப் படிவத்தை, www.tnteu.ac.in என்ற இணையதளத்தில் ஆகஸ்டு 25ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யவேண்டும் பல்கலைக்கழகம் அறிவுறுத்தி உள்ளது.
இதுதவிர மாணவர் சேர்க்கைக்கான தகுதி கட்டணத்தையும் பல்கலைக்கழகம் அறிவித்திருக்கிறது. அதன்படி, பதிவு கட்டணம், நூலகம், தகுதி கட்டணம் உள்பட ரூ.635 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டணத்தையும் ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்குள் இணையவழியில் செலுத்த வேண்டும் என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.