இந்தியாவின் 18-வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகள் மற்றும் 19 மாநிலங்களில் 62 தொகுதிகள் என 102 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலி 7 மணி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில்,திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெஸ்டிரி பள்ளியில் பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா தனது வாக்கினை பதிவு பதிவு செய்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,”தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியான முறையில் வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது மக்கள் மதித்தியில் ஒரு எழுச்சியை காண முடிகிறது.
மக்கள் மாற்றத்திற்கு தயாராக இருக்கிறார்கள். மீண்டும் மிகப்பெரிய வித்தியாசத்தில் நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்று பாரத பிரதமர் மோடி அவர்கள் மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிப்பார் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: அரசியலிலிருந்தே தான் வெளியேறத் தயார் – அண்ணாமலை பரபரப்பு பேட்டி!
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் பண பட்டுவாடா குறித்த கேள்விக்கு?ஒரு சில அமைச்சர்கள் குறிப்பிட்டு தங்களது தொகுதிகளுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக குற்றம் சாட்டினார். கண்டிப்பாக இந்த செயலை திமுக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் மக்கள் இந்த முறை வாக்குக்கு பணம் வாங்குவதை தவிர்த்ததாக தெரிவித்தார். பணம் கொடுத்து எந்த சூழ்நிலையிலும் மக்களிடம் தங்களது வாக்குகளை பெற்று விடலாம் என்று திராவிட கட்சிகள் முற்றிலமாக மாற்ற வேண்டும். தொடர்ந்து பேசியவர் தமிழக முழுவதும் பாரதிய ஜனதா கட்சி எந்த ஒரு இடத்திலும் வேட்பாளர்கள் சார்பாக பணம் கொடுக்க தயாராக இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்ததாக கூறினார்.
மேலும் மாற்றம் வேண்டும் என்றால் மக்கள் மாற வேண்டும், பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் தங்களது கணக்குப்படிபாஜக கூட்டணி சார்பில் தமிழகத்திலிருந்து பத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று குறிப்பிட்டார்