BJP leadership committee meeting | பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் தமிழக பாஜக ஆலோசனை கூட்டம் இன்று தொடங்கியது.
சென்னை தி நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் பாஜக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார்.
இதில் பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தேசிய செயற்குழு உறுப்பினர் பொன்.ராதாகிருஷ்ணன், தற்போதைய தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா, தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க : ”ரூ.463 கோடி மதிப்பீட்டில் 71 கட்டடங்கள்” – திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..!
இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் தமிழக அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசனை நடத்துவது குறித்தும், பிரதமர் மோடி சென்னை வருகை குறித்தும் ஆலோசனை நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக கடந்த 2 ஆம் தேதி (02-03-24 )பாராளுமன்ற தேர்தல் – 2024க்கான முதற்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டது.அதில் 16 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் போட்டியிடும் 195 வேட்பாளர்களின் பட்டியலில் மத்திய அமைச்சர்கள் 34 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : “அறிவிப்புகளை அரசாணைகளாக மாற்றும் அரசு திமுக அரசு” -முதலமைச்சர்
இதில், பிரதமர் நரேந்திர மோடி உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் 3-வது முறையாக போட்டியிடுகிறார். உள்துறை அமைச்சர் அமீத்ஷா குஜராத் மாநிலம் காந்தி நகரில் போட்டியிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.போட்டியிடும் வேட்பாளர்களில் 27 எஸ்.சி., 18 எஸ்.டி., வேட்பாளர்களும், 28 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.