Tamilisai rejoined BJPதமிழிசை சௌந்தரராஜனின் ஆற்றல் மிகுந்த அரசியல் அனுபவங்கள், கட்சியின் வளர்ச்சிக்குப் பெரும் துணையாக அமையும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் மீண்டும் பாஜகவில் இணைந்தார்.
தெலுங்கானா, புதுச்சேரியில் ஆளுநராக இருந்த டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார்.
லோக்சபா தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று சென்னை தி. நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அவரை மாநிலத்தலைவர் அண்ணாமலை வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து தமிழிசை செளந்தரராஜனுக்கு உறுப்பினர் அடையாள அட்டையை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வழங்கினார்Tamilisai rejoined BJP.பாஜகவில் தன்னை மீண்டும் இணைத்துக் கொண்ட தமிழிசை சௌந்தரராஜன் தன்னுடைய பழைய உறுப்பினர் எண்ணைப் பெற்றுக் கொண்டார்.
இதையும் படிங்க: பாஜகவில் மீண்டும் இணைந்தார் தமிழிசை செளந்தரராஜன்!!
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழிசை சௌந்தரராஜன்,
”’நான் மக்கள் பணியாற்றுவதற்காகவே அதிகார பதவியை விட்டு விட்டு மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளேன். ராஜ்பவனை விட்டு விட்டு கமலாலயம் வந்து பாஜகவில் இணைந்துள்ளேன்.ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வது என்று கஷ்டமான முடிவை எடுத்தாலும், அதனை இஷ்டப்பட்டு தான் எடுத்திருக்கிறேன்.
அந்த வகையில், தற்போது கமலாலயத்தில் மீண்டும் நுழைந்ததற்கு இறைவனுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
என் தம்பியிடம் இருந்து அக்கா என்ற முறையில் பாஜக உறுப்பினர் அட்டையைப் பெற்று இருக்கிறேன்” என்று கூறினார்.
இந்த நிலையில், தமிழிசை சௌந்தரராஜனின் ஆற்றல் மிகுந்த அரசியல் அனுபவங்கள், கட்சியின் வளர்ச்சிக்குப் பெரும் துணையாக அமையும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, மத்திய இணையமைச்சர் எல். முருகன், பாராளுமன்றத் தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன்ஆகியோர் முன்னிலையில், கட்சியில் மீண்டும் இணைந்துள்ள தமிழிசை சௌந்தரராஜனனை வரவேற்று மகிழ்கிறேன்.
தமிழக பாஜக மாநிலத் தலைவராக, மிகுந்த உத்வேகத்துடன் செயல்பட்டு, கட்சியின் வளர்ச்சிக்குப் பெரும்பங்கு வகித்து, பின்னர் தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக, இரண்டு மாநில அரசுகளையும் சிறப்பாக வழி நடத்திய அன்பு அக்கா தமிழிசை சௌந்தரராஜன், தனது மக்கள் பணிகளைக் களத்தில் இருந்து மீண்டும் தொடர முடிவு செய்துள்ளது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.
அன்பு அக்கா தமிழிசை சௌந்தரராஜனை வரவேற்பதில் பெருமை அடைவதோடு, அவரது ஆற்றல் மிகுந்த அரசியல் அனுபவங்கள், கட்சியின் வளர்ச்சிக்குப் பெரும் துணையாக அமையும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்திக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.