புல்லட் ரெயில்களுக்கு (bullet train) இணையான இரயில் சேவை நமது இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர வேண்டும் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ள முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒசாகா நகரில் இருந்து டோக்கியோவுக்கு புல்லட் ரயிலில் (bullet train) பயணம் மேற்கொண்டார்.
இதையடுத்து, வேகத்திலும் தரத்திலும் புல்லட் ரயில்களுக்கு இணையான ரயில் சேவை நமது இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர வேண்டும் என்றும் இதன் மூலம் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயனடைய வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், தன்னுடைய டுவிட்டர் பதிவில்…
“ஒசாகா நகரிலிருந்து டோக்கியோவுக்கு புல்லட் ரெயிலில் பயணம் செய்கிறேன். ஏறத்தாழ 500 கி.மீ தூரத்தை இரண்டரை மணிநேரத்திற்குள் அடைந்துவிடுவோம்.
உருவமைப்பில் மட்டுமல்லாமல் வேகத்திலும் தரத்திலும் புல்லட் ரெயில்களுக்கு இணையான இரயில் சேவை நமது இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர வேண்டும்;
ஏழை – எளிய – நடுத்தர மக்கள் பயனடைந்து, அவர்களது பயணங்கள் எளிதாக வேண்டும்!” என்று தெரிவித்து உள்ளார்.