சென்னை மெரினாவில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள (Anna kalaingar memorials) முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடம்,கருணாநிதியின் புதிய நினைவிடம் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார் .
சென்னை மெரினாவில் சுமார் 8.57 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளன பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் இரண்டு நினைவிடங்களும் பொன்னிறத்தில் ஒளிர
கலைஞர் அவர்களின் சதுக்கத்தின் கீழே நிலவறைப் பகுதியில், “கலைஞர் உலகம்” எனும் பெயரில் ஓர் அருமையான அருங்காட்சியகம் அமைக்கப் பட்டுள்ளது.
நடைபாதையின் வலது புறத்தில் கலைஞர் நிர்மாணித்த திருவள்ளுவர் சிலை, குடிசை மாற்றுவாரியம் முதலியவை படங்களாக அமைக்கப்பட்டு விளக்கொளியுடன் அழகாக காட்சியளிக்கின்றன .
அப்படியே மெதுவாக நடந்து சென்று உள்ளே போய் பார்த்தல் இடப்பக்கச் சுவரில் தமிழ்த்தாய் வாழ்த்து பொறிக்கப் பட்டுள்ளது.
இந்த பக்கம் அறைகளுக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் இருபுறங்களிலும், பெண்ணிய காவலர், ஏழைப் பங்காளர், நவீன தமிழ் நாட்டின் சிற்பி, உள்ளிட்ட பல தலைப்புகளில் அமைந்த காட்சிப்படுத்தப்பட்டுள்ளன .
Also Read : https://itamiltv.com/abandon-parantur-airport-project/
மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலும், சேகர் பாபு உள்ளிட்ட அமைச்சர்கள்
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, (Anna kalaingar memorials) திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, நடிகர் ரஜினிகாந்த் மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள்
எம்.பிக்கள் என பலரும் கலந்து கொண்டு இந்த இரு நினைவிடங்களையும் கண்டு இருவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர் .