Sugarcane Farmer Symbol-நாடாளுமன்ற தேர்தலுக்காக நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் மறுக்கப்பட்ட து. இந்த நிலையில் சுயேச்சை வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டது குறித்து தேர்தல் ஆணையம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியை சேர்ந்த விவசாயிகள் கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டு வருகின்றனர்.
அதன்படி ,கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சிக்கு 6.72 சதவீத வாக்குகள் கிடைத்தது.
இதுவரை எந்த தேர்தலிலும் சீமான் கட்சி வெற்றி பெறவில்லை என்றாலும் வாக்கு சதவிகிதம் தற்போது கிட்டத்தட்ட தற்பொழுது வரை 7 சதவீதமாக இருந்து வருகிறது.
இந்த சூழலில் நாடாளுமன்ற தேர்தலுக்காக கூடுதல் வாக்குகளை பெற நாம் தமிழர்கட்சி தீவிரம் காட்டி பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.
கடந்த முறை நடைபெற்ற தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டு வந்த நிலையில், இந்த நாடாளுமன்ற தேர்தலிலும் கரும்பு விவசாயி சின்னம் கோரியிருந்தனர்.
ஆனால் இந்த தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
ஏனென்றால் அந்த சின்னம் கர்நாடகாவை சேர்ந்த பாரதிய பிரஜா ஜக்யதா கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது
இதனால் அதிர்ச்சியடைந்த சீமான் சின்னம் தொடர்பாக சீமான் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரித்த நீதிமன்றம் சீமானின் நாம் தமிழர் கட்சி என்பது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்பதை குறிப்பிட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு மறுக்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னம், சுயேச்சை வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டது எப்படி என்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: MiC : நாம் தமிழர் கட்சிக்கு “மைக்” சின்னம் ஒதுக்கீடு – இந்திய தேர்தல் ஆணையம்!
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், “அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட மாநில கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் ஒரு குறிப்பிட்ட சின்னத்தை ஒதுக்கீடு செய்யும்.
இதன்படி, சம்பந்தப்பட்ட அந்த கட்சியின் வேட்பாளர் அந்த தொகுதியில் போட்டியிட்டால் அவருக்கு அந்த சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும்.
அந்தக் கட்சியின் வேட்பாளர் போட்டியிடாத தொகுதிகளில், அந்தச் சின்னம் சுயேச்சை சின்னம்(free symbol) ஆக எடுத்துக் கொள்ளப்படும். ஒரு சின்னம் free symbol பட்டியலில் சேர்க்கப்பட்டு விட்டால் எந்த சுயேச்சை வேட்பாளரும் அந்த சின்னத்தை கேட்கலாம்.
இதன்படி, ஒரு சின்னத்தை பொது சின்னமாக பெற்ற கட்சி ஒரு தொகுதியில் போட்டியிடாவிட்டால், அந்த தொகுதியில் அந்த குறிப்பிட்ட சின்னம் free symbol பட்டியலுக்கு சென்று விடும். இந்த விதிகளின் படி தான் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.