பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், பயிர் காப்பீடு செய்யாத விவசாயிகள் உடனடியாக செய்ய வேண்டுமென்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்த கடைசி தேதியை தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அறிவித்துள்ளது.
அதில் தஞ்சாவூர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, இராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், சிவகங்கை, கடலூர், திருவள்ளூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் காப்பீடு செய்வதற்கு வரும் நவம்பர் 15-ம் தேதி கடைசி நாள்.
கன்னியாகுமரி, அரியலூர், திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு வரும் டிசம்பர் 15-ம் தேதி கடைசி நாள் ஆகும்.
பயிர்காப்பீடு செய்யாத விவசாயிகள் அனைவரும் உடனடியாக வங்கிகள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் அல்லது பொது சேவை மையங்கள் மூலமாக பதிவு செய்து கொள்ள அரசு வலியுறுத்தியுள்ளது.