காவிரியில் தண்ணீர் திறக்கப்படாததால் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் (TN-KA ) விவசாயிகளுக்கு, அதற்கான நஷ்ட ஈட்டை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :
காவிரி நதியில் குறித்த நேரத்தில் தண்ணீர் திறக்கப்படாததால், இந்த ஆண்டு டெல்டா பகுதிகளில் சம்பா நெல் சாகுபடி, 40% குறைந்திருப்பதாக இன்றைய நாளிதழில் செய்தி வெளிவந்துள்ளது.
முழுக்க முழுக்க திமுகவின் கையாலாகாத்தனமே இதற்குக் காரணம். கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணிக்காக, விவசாயிகள் பற்றியோ
காவிரி தண்ணீர் பற்றியோ, எந்தக் கவலையும் இன்றி, சரியான நேரத்தில் தண்ணீர் பெற்றுக் கொடுக்காமல், தமிழக விவசாயிகளை வஞ்சித்திருக்கிறது திமுக அரசு.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த உடனேயே, போதுமான அளவு தண்ணீர் இருந்தும், தமிழகத்துக்குச் சேர வேண்டிய தண்ணீரைத் திறந்து விட மறுத்து வந்தது.
அதை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டிய திமுக அதற்காக எந்தக் குரலையும் எழுப்பவில்லை.
இன்று, டெல்டா விவசாயிகள் 40% குறைவான மகசூலால் பாதிக்கப்பட்டிருப்பதற்கு இந்த இரண்டு மாநில திமுக காங்கிரஸ் அரசுகளே முழு பொறுப்பு.
போதிய மகசூல் இல்லாமல் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் விவசாயிகளுக்கு, அதற்கான நஷ்ட ஈட்டை, தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என அண்ணாமலை வெளியிட்டுள்ளாள் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஏற்கனவே தமிழ்நாட்டுக்கு கர்நாடகாவுக்கு காவேரி பிரச்னை நெடு நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் நிலையில்
தற்போது இரு மாநில அரசுகளும் இந்த பிரச்சனையில் சுமூக தீர்வு காண பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
Also Read : https://itamiltv.com/lalithambigai-temple-chariot-festival/
இப்படி இருக்கும் நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள பல அரசியல் காட்சிகள் காவேரி பிரச்னையை தீர்க்க முடியாமல் அரசு தினறி (TN-KA ) வருவதாக கூறி கூரை மேல் குறைகள் கூறி வருகிறது.
இந்நிலையில் காலம் காலமாக நடைபெற்று வரும் இந்த தண்ணீர் பிரச்சனைக்கு எப்போது தான் தீர்வு கிடைக்கும் என தெரியவில்லை இதனால் விவசாயிகள் தான கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.