NEET Coaching: 2023- 24ஆம் கல்வியாண்டில் NEET போட்டித் தேர்விற்கு அரசுப் பள்ளி மாணவர்களை ஆயத்தப்படுத்த தொடர் பயிற்சி அளிப்பது தொடர்பாக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்.. 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகள் முடிந்த பின்னர் 25.03.2024 முதல் 02.05.2024 வரை நீட் தேர்வு சார்ந்த பயிற்சிகள் /தேர்வுகள் 12-ஆம் வகுப்பு மாணவ / மாணவியர்களுக்கு கல்வி மாவட்ட அளவில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது
- நவம்பர் 2023 முதல் பிப்ரவரி 2024 வரை பள்ளி அளவில் நீட் மற்றும்ஜேஇஇ தேர்வுகள் சார்ந்த பயிற்சிகள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது.
- இதன் தொடர்ச்சியாக 12 ஆம் வகுப்பு அரசு பொதுதேர்வுகள் முடிந்த பின்னர் 25.03.2024 முதல் 02.05.2024 வரை நீட் தேர்வு சார்ந்த பயிற்சிகள்/ தேர்வுகள் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி மாவட்ட அளவில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
- ஒரு கல்வி மாவட்டத்திற்கு அதிகபட்சம் இரண்டு பயிற்சி மையங்கள்அமைக்கப்பட வேண்டும். ஒரு மையத்திற்கு 40 மாணவர்கள் என மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளலாம்.
- இணையதள வசதி மற்றும் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் வசதி கொண்ட பள்ளிகளை பயிற்சி மையங்களாக தேர்வு செய்ய வேண்டும்.
இதையும் படிங்க: ”நிக்க வச்சு சுடணும்” என்கிற மக்களின் உணர்வுடன் ஒத்துப் போகிறேன் -ஆளுநர் தமிழிசை!
- பயிற்சி மையங்களில் தமிழ் மற்றும் ஆங்கில (Bilingual) வழியில்பயிற்சிகள்/ தேர்வுகள் நடைபெறும்.
- ஒரு மையத்திற்கு இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும்விலங்கியல் என ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியே திறமையும், ஆர்வமும், விருப்பமும் உடைய ஆசிரியர் குழுவினை தெரிவு செய்துகொள்ள வேண்டும்.
- ஏற்கனவே நீட் தேர்வு சார்ந்த பயிற்சி வகுப்புகளை நடத்தி வரும் ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
- ஒவ்வொரு மையத்திற்கும் நாள் ஒன்றுக்கு நான்கு ஆசிரியர்கள்விலங்கியல், வேதியியல், தாவரவியல் மற்றும் இயற்பியல் என்ற வரிசையில் ஆசிரியர்கள் விருப்ப பாடம் அடிப்படையில் சுழற்சி முறையில் ஆசிரியர்களை பயன்படுத்தலாம்.
- அனைத்து பாடங்களிலும் அனைத்து பாடப்பகுதிகளிலும் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கும் வகையில் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு பாடப்பகுதி ஆசிரியர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
- நவம்பர் மாதம் முதல் வழங்கிய பயிற்சியில் சிறந்து விளங்கிய மாணவர்கள் நீட் தேர்விற்கு விண்ணப்பிப்தை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.
- நவம்பர் 2023 முதல் இப்பயிற்சியில் பங்கு பெறும் அனைத்து மாணவர்களும் நீட் தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாளான 09.03.2024 க்குள் தங்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதை தலைமையாசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.
இதையும் படிங்க: BREAKING | நடிகர் அஜித் குமார் மருத்துவமனையில் அனுமதி!
- நீட் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள அனைத்து மாணவர்களும் தேர்வு செய்யப்பட்டட பயிற்சி மையங்களுக்கு பாதுகாப்பாக சென்று வருவதை சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்.
- பயிற்சி வகுப்புகளின் போது காலை சிற்றுண்டி, தேநீர் மற்றும் மதிய உணவு மாணவர்களுக்கு வழங்கப்படும்.
- மேலும் பயிற்சி வகுப்புகளுக்கு சென்று வருவதற்கான பேருந்து கட்டணத் தொகை மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்படும்.
- பயிற்சி மையங்கள் திங்கள் முதல் சனி வரை காலை 9.15 மணி முதல் மாலை 4.30 மணி வரை செயல்படூம். காலை சிற்றுண்டி 8.30 மணி முதல் 9.00 மணி வரை வழங்கப்படும்.
- ஒவ்வெரு சனிக்கிழமை அன்றும் காலை 9.15 மணி முதல் 10.45 மணி வரை திருப்புதலும் அதைத் தொடர்ந்து 11.00 மணி முதல் 12.40 மணி வரை வாராந்திர தேர்வுகளும் நடைபெறும்.
- மதிய உணவு இடைவெளிக்குப்பின் பிற்பகலில் கலந்துரையாடல் மற்றும் Motivation அமர்வுகள் சிறந்த வல்லுநர்களை கொண்டு நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
- பயிற்சியின் இறுதியில் மொத்தம் 3 திருப்புதல் தேர்வுகள் நடைபெறும்.
இவ்வாறு பள்ளிக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.