உத்தராகண்ட் சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கித் தவித்த 41 தொழிலாளர்களும் 17 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளார்க்கு முக்கிய காரணமாக இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவுக்கும் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த அனைவர்க்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதர் ,மோடி விடுத்துள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
உத்தரகாசியில் நமது தொழிலாளர்களை மீட்கும் பணி வெற்றிடைந்துள்ளது அனைவரையும் உணர்ச்சிவசமாக்கியுள்ளது
சுரங்கத்தில் சிக்கியிருந்த தொழிலாளர்களின் தைரியமும், பொறுமையும், எல்லோருக்கும் உத்வேகத்தை அளித்துள்ளது; மீட்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் அனைவரும் நலமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வாழ்த்துகிறேன்.
நீண்ட காத்திருப்புக்கு பிறகு தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினரை சந்திக்கவுள்ளது மிகவும் திருப்திகரமான விஷயம்
இந்த சவாலான நேரத்தில் தொழிலாளர்கள் குடும்பங்களின் தைரியமும், அவர்கள் காட்டிய பொறுமையும் பாராட்டுக்குரியது
இந்த மீட்பு பணியில் அயாராது உழைத்த அனைத்து மீட்புக்குழுவினர்களுக்கும், நிபுணர்களுக்கும் நான் தலைவணங்குகிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதேபோல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
உத்தரகாசி சுரங்கப்பாதை சரிவில் சிக்கிய 41 தொழிலாளர்களும் 17 நாட்களுக்குப் பிறகு வெற்றிகரமாக மீட்கப்பட்டது நிம்மதியளிக்கிறது. மீட்புப் பணியில் அயராது உழைத்த துணிச்சலான மீட்புக் குழுக்கள் மற்றும் எலிவளை சுரங்கத் தொழிலாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
துணிச்சல் மிக்க 41 தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு வலிமையும் உறுதியும் கிடைக்க வாழ்த்துகிறேன் என் சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களையும் மீட்ட மீட்புக்குழுவினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.