பாரத பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 20 ஆம் தேதி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தரப்பில் இருந்து இதுவரை நேரம் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
Also Read : விநாயகருக்கு படைத்த லட்டு ஒரு கோடியே 87 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது..!!
நேரம் உறுதி செய்யப்படும் பட்சத்தில் வரும் 20ம் தேதி பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசின் சமக்கிர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்காமல் உள்ளது
சமக்கிர சிக்ஷா அபியான் திட்ட நிதி, மெட்ரோ ரயில் திட்ட நிதி உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்துவார் எனவும் அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.