ஆட்சி பொறுப்பில் ஏறிய நாள் முதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அம்னிசியாவில் இருந்து (anbumani) வருவதாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார் .
தேசிய ஜனநாயக கூட்டணியில் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜோதி வெங்கடேசனை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் திருக்கழுக்குன்றத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது பேசிய அவர் கூறியதாவது :
57 ஆண்டுகளாக திமுக அதிமுக மாறி மாறி தமிழ்நாட்டை ஆட்சி செய்து கொண்டு நாசப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் முழுவதும் நான் சுற்றி வந்ததில், இவர்கள் இருவரும் போதும் என்ற மனநிலை மக்களுக்கு வந்துவிட்டது.
Also Read : https://itamiltv.com/actor-suriya-wishes-the-new-book-release/
இவர்கள் இருவரும் மாறி மாறி ஆட்சி செய்ததால் உங்களுக்கு என்ன கிடைத்தது? இளைஞர்களுக்கு வேலை கிடைத்ததா? விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? ஒரு தாய்மார்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? எங்கு பார்த்தாலும் சாராயம் சாராயம், மறுபக்கம் பார்த்தால் போதை பொருள், அமெரிக்காவில் கிடைக்கும் அத்தனை போதை பொருட்கள் தமிழ்நாட்டில் கிடைக்கிறது.
சமூகநீதிக்கும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் என்ன சம்பந்தம். பாமக எல்லா சமூகத்தினரையும் அரவணைக்கும் கட்சி. அடுத்த 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு மக்களுக்கு விடியல் ஆட்சி. மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை, (anbumani) இலவச கல்வி, வேலைவாய்ப்பு, இலவச உயர்சிகிச்சை மருத்துவம் அனைத்தும் செய்து தரப்படும். ஆட்சி பொறுப்பில் ஏறிய நாள் முதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அம்னிசியாவில் இருந்து வருகிறார் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார் .